News

தர்கா நகருக்கு இரட்டிப்புப் பெருமை: ஒரே வாரத்தில் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட இரு பெண் ஆளுமைகள்!

தர்கா நகர்: கல்வி வரலாற்றில் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, தர்கா நகரைச் சேர்ந்த இரு இளம் பெண் பட்டதாரிகள் இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் உயர் நீதிமன்ற சட்டத்தரணிகளாக (Attorney-at-Law) மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் கம்பீரமாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டு ஊருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.



இவ்விரு ஆளுமைகளும் தர்கா நகரைப் பிறப்பிடமாகக் கொண்டதுடன், களு/ அளுத்கம முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலையின் முன்னாள் மாணவிகள் என்பதும், யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் (University of Jaffna – LL.B) தங்களது சட்டக் கல்வியை நிறைவு செய்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாகும்.

👩‍🎓 சட்டத்தரணி சஸ்ரா சுவைப்!

தர்கா நகரைச் சேர்ந்த மொஹமட் சுவைப் மற்றும் பாத்திமா ரிஹானா தம்பதியினரின் அன்புப் புதல்வியான செல்வி. சஸ்ரா சுவைப் (2018 உயர்தர மாணவி), கடந்த 23.06.2026 அன்று தனது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டார்.

👩‍🎓 சட்டத்தரணி அஸ்மா பைஸர்!
தர்கா நகரைச் சேர்ந்த அல்ஹாஜ் பைசர் மற்றும் பாத்திமா சில்மியா தம்பதியினரின் அன்புப் புதல்வியும், அல்ஹாஜ் ரிபான் ஹாரிஸ் (Tile Lanka) அவர்களின் மருமகளுமான செல்வி. அஸ்மா பைஸர், கடந்த 25.06.2026 அன்று தனது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டார்.

ஒரே ஊரில் பிறந்து, ஒரே பாடசாலையில் பயின்று, ஒரே பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்து, ஒரே வாரத்தில் இந்த உயரிய சாதனையை அடைந்துள்ள சட்டத்தரணிகள் சஸ்ரா சுவைப் மற்றும் அஸ்மா பைஸர் ஆகியோரின் எதிர்கால சட்டப் பணிகளும், சமூக சேவைகளும் சிறந்து விளங்க தர்கா நகர் மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! ✨

வாழ்த்துக்களுடன்:
✍️ Faisan Hamsa
📍 Dharga Town
📅 27.06.2026

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button