News
அரச வங்கியிலிருந்து வெளியில் எடுத்து வரப்பட்ட 35 மில்லியன் ரூபா அடங்கிய பணப்பையை நபர் ஒருவர் திருடிக் கொண்டு ஓடிய சம்பவம் பதிவு

ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றுக்கு வெளியில் 35 மில்லியன் ரூபா அடங்கிய பை ஒன்று திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, குறித்த பணம் மற்றொரு வங்கியில் வைப்பிலிடுவதற்காக அரச வங்கியிலிருந்து வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளது.
பணம் அரச வங்கியிலிருந்து வெளியில் கொண்டு வரப்பட்ட போது, நபர் ஒருவர் அந்தப் பையைத் திருடிக்கொண்டு அப்பகுதியிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று (03) பிற்பகல் 3.00 மணியளவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



