இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு ரணில் விக்ரமசிங்கவின் மூளையும், சஜித் பிரேமதாசவின் உடலும் தேவை ; நவீன் திசாநாயக்க
எங்களுடைய தொகுதி அமைப்புகளை நாங்கள் இன்னும் நிறுவவில்லை. எங்களுக்கு தொழிற்சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், மாணவ சங்கங்கள் போன்ற ஒரு வேலைத்திட்டம் இன்னும் உருவாக்கப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்..
இப்போது சஜித் கட்சியினருக்கும் இல்லை, நமக்கும் இல்லை.
அவருக்கு (சஜித்) பெரும்பான்மை இருக்கலாம், ஆனால் அவருக்கு வெற்றி இல்லை.
அதனால் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு ரணில் விக்ரமசிங்க அவர்களின் மூளை தேவை என்றும், சஜித் அவர்களின் உடல் (வலிமை) தேவை என்றும் நவீன் திசாநாயக்க மேலும் தெரிவித்தார்
UNP இன் சக்தியை நாம் கட்டியெழுப்ப வேண்டும். நாம் உண்மையை பேசுவோம், ஐக்கிய தேசியக் கட்சிக்கு தற்போது அத்தகையதொரு சக்தி இல்லை. எங்களுடைய தொகுதி அமைப்பாளர்களை நாங்கள் சரியாக நியமிக்கவில்லை.
எங்களுடைய தொகுதி அமைப்புகளை நாங்கள் நிறுவவில்லை. எங்களுக்கு தொழிற்சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், மாணவ சங்கங்கள் போன்ற ஒரு வேலைத்திட்டம் இன்னும் உருவாக்கப்படவில்லை.
நமக்கு இருந்தது, ஒரு பிரம்மாண்டமான ஐக்கிய தேசியக் கட்சியாக அது நமக்கு இருந்தது. ஆனால் சஜித் பிரேமதாச அவர்கள் வெளியில் சென்று அதை உடைத்தார்.
இப்போது அவருக்கும் இல்லை, நமக்கும் இல்லை. அதுதான் கதை. அவருக்கு பெரும்பான்மை இருக்கலாம், ஆனால் அவருக்கு வெற்றி இல்லை. நமக்கு பெரும்பான்மையும் இல்லை, வெற்றியும் இல்லை. ஆனால் இன்று ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறுகிறார்கள், இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு ரணில் விக்ரமசிங்க அவர்களின் மூளை தேவை என்றும், சஜித் அவர்களின் உடல் (வலிமை) தேவை என்றும். எனவே, இந்த இரண்டையும் நாம் ஒன்றிணைப்பது மிகவும் முக்கியமானது.



