News

ஊழல் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் சற்றுமுன் தீர்ப்பு

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரண குணவர்தனவுக்கு எதிராக கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளின் தீர்ப்பை அறிவித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதன்படி, பிரதிவாதிக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளதுடன், அது தொடர்பான விடயங்களை முன்வைக்கும் பணிகளில் சட்டத்தரணிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு அபிவிருத்தி அதிர்ஷ்டலாப சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக, “ஊழல்” குற்றச்சாட்டின்கீழ் கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button