News

உடுநுவர பிரதேச சபை உப தவிசாளர் உட்பட இரு பெண் உறுப்பினர்கள் இராஜினாமா!

ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் மூலம் உடுநுவர பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இரண்டு பெண் உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

அச்சபையின் உப தவிசாளராகப் பணியாற்றிய திருமதி பாத்திமா நுஸ்ரத், கட்சியின் தீர்மானத்திற்கு அமைய உடுநுவர பிரதேச சபையின் ஓராண்டு பதவிக்காலம் பூர்த்தியான கடந்த 11ஆம் திகதி தனது இராஜினாமா கடிதத்தை பிரதேச சபைச் செயலாளரிடம் கையளித்துள்ளார். இத்தகவலை ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மஸீஹுத்தீன் நயீமுல்லாஹ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஐக்கிய தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த மற்றுமொரு போனஸ் ஆசனத்துக்காக நியமிக்கப்பட்டிருந்த திருமதி கங்கா மொஹமட் ஹாரூன் அவர்களும் கடந்த 12ஆம் திகதி காலை தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை சபைச் செயலாளரிடம் கையளித்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இவ்விரு பெண் உறுப்பினர்களினதும் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவது குறித்து வினவியபோது, தெரிவத்தாட்சி அலுவலரால் அதிகாரப்பூர்வமாகக் கோரப்படும் பட்சத்தில், புதிய உறுப்பினர்களின் விபரங்கள் அடங்கிய கடிதத்ததை தேர்தல் காரியாலயத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button