News
VIDEO > கண்டி – அக்குறனை வீதி அம்பதென்ன பகுதியில் பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான பாடசாலை வேன் – மாணவ மாணவிகள் உள்ளிட்ட 17 பேர் காயம்

கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின் கடூகஸ்தொட்ட, அம்பதென்ன பகுதியில் இன்று (15) பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்தொன்று நேர்ந்துள்ளது.
Video 👇👇
https://www.facebook.com/share/r/1BPko2mZv2/
இவ்விபத்தில் 17 பாடசாலை மாணவ, மாணவிகளும் வேனின் ஓட்டுநரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் பேருந்து கண்டி நோக்கியும், பாடசாலை வேன் அதற்கு எதிர் திசையிலும் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதுடன்,
காயமடைந்தவர்கள் கடூகஸ்தொட்ட பிரதேச வைத்தியசாலை மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக கடூகஸ்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



