சர்வதேச அபாகஸ் கணிதப் போட்டியில் இலங்கை மாணவர்கள் சாதனை

மலேசிய கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் ICAM ABACUS நிறுவனம் ஏற்பாடு செய்த சர்வதேச அபாகஸ் கணிதப் போட்டி 2026 ஜூன் 4ஆம் தேதி மலேசியாவின் Genting Highlands நகரில் சிறப்பாக நடைபெற்றது.
உலகின் 13 நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், இலங்கையைச் சேர்ந்த ICAM ABACUS நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகளான திரு. T.M. Shafi மற்றும் திருமதி A.N.F. Shukra ஆகியோரின் தலைமையின் கீழ் இயங்கும் பல்வேறு கிளைகளிலிருந்து 38 மாணவர்கள் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் சிறந்த வெற்றிகளைப் பெற்று இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பெருமை சேர்த்துள்ளனர்.
அந்த வகையில், ICAM ABACUS பொல்கஹவெல கிளையைச் சேர்ந்த திறமையான மாணவி Meelaf, இரண்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் இரண்டாம் இடத்தைப் பெற்று சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ICAM ABACUS பொல்கஹவெல கிளையின் ஆசிரியரான திருமதி A.F. சரீனாவின் வழிகாட்டல் மற்றும் பயிற்சியின் கீழ் போட்டிகளில் பங்கேற்ற இம்மாணவி, பந்தாவையைச் சேர்ந்த திரு. ரிஸ்மி மற்றும் திருமதி ஷிபா ஆகியோரின் அன்புப் புதல்வி ஆவார்.
இம்மாணவியின் சாதனை அவரது குடும்பத்திற்கும், கல்வி நிலையத்திற்கும், பிரதேசத்திற்கும் மட்டுமல்லாது, முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், சர்வதேச அரங்கில் இலங்கை மாணவர்களின் திறமையை மீண்டும் ஒருமுறை உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



