ஈரானுடன் 🇺🇸 சமாதானமாக செல்லும் நிலையில், அமெரிக்கா எதிர்காலத்தில் 9/11 தாக்குதலை விட 10 மடங்கு மோசமான ஒரு பயங்கரவாதத் தாக்குதலைச் சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் தரப்பில் இருந்து வெளியாகும் எச்சரிக்கைகள் ஒரு பார்வை

✍️ முகிந்தன் துரைராஜசிங்கம்
இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனத்தின் (Israeli defense institute) ஆய்வாளரான பென் சாப்தி (Ben Sabti), அமெரிக்கா தனது உண்மையான நட்பு நாடுகள் யார் என்பதை உணர்வதற்கு “அமெரிக்காவிற்கு மற்றொரு Pearl Harbour அல்லது 9/11 போன்றதொரு தாக்குதல் தேவைப்படலாம்” என்று கூறியுள்ளது உலகரீதியில் ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்த சர்ச்சை ஒருபுறம் வெடித்துக் கொண்டிருக்க, இஸ்ரேல் ஆதரவு வர்ணனையாளரான லாரா லூமர்( Laura Loomer), “அமெரிக்கா எதிர்காலத்தில் 9/11 தாக்குதலை விட 10 மடங்கு மோசமான ஒரு பயங்கரவாதத் தாக்குதலைச் சந்திக்க நேரிடும்” என்று தனிப்பட்ட முறையில் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் வரலாற்றையே மாற்றி எழுதிய, நெஞ்சை உலுக்கும் இரு பெரும் கறுப்பு தினங்கள்:
Pearl Harbour மற்றும் செப்டம்பர் 11 (9/11) பயங்கரவாதத் தாக்குதல்.
ஒட்டுமொத்த அமெரிக்காவையும் நிலைகுலையச் செய்த இந்தத் துயரங்கள், மீண்டும் அரங்கேறப்போகிறதா?
“அமெரிக்காவிற்கு அடுத்த பேரழிவு காத்திருக்கிறது” என சர்வதேச அளவில் வெளியாகி வரும் அதிர்ச்சித் தகவல்கள் உலகை சற்று சிந்திக்க வைத்துள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனத்தின் (Israeli defense institute) மூத்த ஆய்வாளரான பென் சாப்தி (Ben Sabti) விடுத்துள்ள ஒரு அறிக்கை, அமெரிக்க மக்களிடையே கடுமையான அச்சத்தையும் பீதியையும் கிளப்பியுள்ளது.
“அமெரிக்கா தூங்கிக் கொண்டிருக்கிறது! யார் தனது உண்மையான நண்பன் என்பதை அமெரிக்கா உணர்வதற்கு, அதற்கு “மற்றொரு Pearl harbour அல்லது 9/11 போன்றதொரு அணு குண்டு தாக்குதலோ அல்லது கொடூரமான பேரழிவோ” அவசரமாகத் தேவைப்படுகிறது என கூறியுள்ளார்.
2,400 உயிர்களைக் குடித்த pearl harbour , 3,000-க்கும் மேற்பட்டோரை சாம்பலாக்கிய 9/11 தாக்குதல் போன்ற ஒரு கோர விபரீதம் மீண்டும் அமெரிக்க மண்ணில் நிகழப்போகிறதா என்ற மரண பயத்தை இந்த வார்த்தைகள் விதைத்துள்ளன.
இந்த பயத்திற்கு மேலும் எரியூட்டும் வகையில், பிரபல இஸ்ரேல் ஆதரவு வர்ணனையாளரான லாரா லூமர் (Laura Loomer) விடுத்துள்ள எச்சரிக்கை ஒட்டுமொத்த உலகையுமே உறைந்துபோகச் செய்துள்ளது.
அமெரிக்கா மிக விரைவில் “9/11 தாக்குதலை விட 10 மடங்கு கற்பனை செய்ய முடியாத, ரத்த வெள்ளம் ஓடக்கூடிய மிக மோசமானதொரு பயங்கரவாதத் தாக்குதலை” எதிர்கொள்ளப் போகிறது என்று அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
இது வெறும் எச்சரிக்கையா? அல்லது திரைமறைவில் நடக்கும் ஏதோ ஒரு பெரிய சதியின் அறிகுறியா என்பது பற்றி நாம் ஆராயவேண்டும்.
தற்போது அமெரிக்கா ஈரானுடன் இராஜதந்திர ரீதியாகவோ அல்லது சமாதானப் போக்கிலோ சென்றால், அது இஸ்ரேலின் பிராந்தியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும் என்பது இஸ்ரேலின் கவலை.
எனவே, அமெரிக்காவை ஈரானுக்கு எதிராகப் போரிட வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தின் காரணமாகவே, இத்தகைய ‘False Flag’ தாக்குதல்களில் இஸ்ரேல் ஈடுபட்டே ஆகவேண்டும்.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான தற்போதைய புவிசார் அரசியல் மோதல்கள் மிகத் தீவிரமானவை என்பது நிதர்சனம்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அதன் ஆதரவு அமைப்புகள் (Hezbollah, Hamas போன்றவை) தனது நாட்டின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல் என்று இஸ்ரேல் கருதுகிறது.
அமெரிக்கா ஈரானுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளிலோ அல்லது அணுசக்தி ஒப்பந்தங்களிலோ ஈடுபடும்போது, அது தங்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் என்று இஸ்ரேல் பலமுறை கவலை தெரிவித்துள்ளது.
இதனால், அமெரிக்காவை ஈரானுக்கு எதிராகத் திருப்ப இஸ்ரேல் தீவிரமான வெளியுறவுக் கொள்கை மற்றும் அரசியல் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறது என்பது வெளிப்படையான உண்மை.
இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவின் பழைய தேசியப் பேரழிவுகளான Pearl Harbour மற்றும் 9/11 தாக்குதல்கள் ஏன் மீண்டும் மீண்டும் பொதுவெளியில் நினைவுபடுத்தப்படுகின்றன?
இஸ்ரேல் தனது பிராந்திய எதிரியான ஈரானுக்கு எதிராக அமெரிக்காவை ஒரு முழு அளவிலான போருக்குள் இழுக்க முயல்கிறதா என்ற கோணத்தில் நாம் இதை அணுக வேண்டும்.
பொதுமக்களின் மனதில் எல்லையற்ற பயத்தையும், பாதுகாப்பற்ற உணர்வையும் திட்டமிட்டு விதைப்பதன் மூலம் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க முடியும் என்பது அரசியல் உத்திகளில் ஒன்று.
மத்திய கிழக்கில் நடக்கும் போரில் அமெரிக்கா நேரடியாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு அமெரிக்கப் பொதுமக்களின் ஆதரவு தேவை.
வரலாற்றில் பலமுறை, சில நாடுகள் தங்களின் சுயலாபத்திற்காகவும், பிற நாடுகள் மீது போர் தொடுப்பதற்கான காரணத்தை உருவாக்குவதற்காகவும், தங்களுக்குத் தாங்களே அல்லது நட்பு நாடுகள் மீது “திட்டமிட்ட நாடகங்களை” (False Flag Operations) அரங்கேற்றியுள்ளன.
9/11 தாக்குதல் நடந்த காலகட்டத்திலிருந்து, அமெரிக்காவில் இருந்த சில இஸ்ரேலிய குடிமக்கள் (எடுத்துக்காட்டாக, “The Dancing Israelis” என்று குறிப்பிடப்பட்டவர்கள்) தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகத்திற்குரிய வகையில் நடந்துகொண்டதாகக் கூறி FBI அமைப்பால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, “மொசாட்டிற்கு இந்தத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரியும்” அல்லது “அவர்களே இதை நடத்தினார்கள்” என்பது உலகறிந்த உண்மை.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது நாட்டின் பாதுகாப்பிற்கும் இருத்தலுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் போது, இஸ்ரேல் கடுமையான மற்றும் சமரசமற்ற முடிவுகளை எடுக்கும் என்பது வரலாற்று ரீதியாக நாம் காண்டதொன்று.
தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான எந்தவொரு இராஜதந்திர சமாதான முயற்சியும், தனது நாட்டின் பாதுகாப்பு வளையத்தை பலவீனப்படுத்தும் என்ற தீவிரமான கவலை இஸ்ரேலுக்கு உண்டு.
ஈரானை ஒரு பொதுவான அச்சுறுத்தலாக அமெரிக்கா பார்க்க வேண்டும் என்பதே இஸ்ரேலின் முதன்மை நோக்கமாக உள்ளது.
இருப்பினும், இந்த அரசியல் அழுத்தங்களின் காரணமாக, இஸ்ரேல் தனது மிக நெருங்கிய மற்றும் முதன்மையான நட்பு நாடான அமெரிக்காவின் மீதே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு கொடூரமான தாக்குதலை (False Flag) நடத்தினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அமெரிக்காவின் ராணுவ, நிதி மற்றும் இராஜதந்திர ஆதரவு இல்லாமல் இஸ்ரேலால் மத்திய கிழக்கில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது.
எனவே, அத்தகைய ஆதரவை வழங்கும் ஒரு நாட்டின் மீதே தாக்குதல் நடத்துவது இஸ்ரேலின் சொந்த அழிவிற்கே வழிவகுக்கும்.
அதற்காகவே ஒரு false flag attack ஒன்றை நடத்திவிட்டு அதை வழமை போல் முஸ்லிம்களின் தலையில் போட்டாலும் உலகம் அதை நம்பித்தான் ஆகவேண்டும்.
எனவே வரும் காலங்களில் அமெரிக்காவில் பெரும் தாக்குதல் ஒன்றை எதிர் பார்க்கலாம்.
அந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கப் போகின்றனர் என்பதற்கான விடையை இந்தப் பதிவு உங்களுக்கு தெளிவாக விளக்கி இருக்கும் என நம்புகிறேன்.



