News
மடவளை மதீனா தேசிய பாடசாலை மாணவன் ஏ .ஆர். ரியாஸ் மொஹமட் (மடவளை பஸார் – உக்குவலை) உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக

மடவளை பிஹில்லதெனியவில் பிறந்து தற்போது உக்குவலையில் வசித்து வரும் ஏ .ஆர். ரியாஸ் மொஹமட் அவர்கள் 2026. 6.23ஆம் தேதி உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக (Attorney -At-Law)சத்திய பிரமாணம் செய்து கொண்டார் .
இவர் ஆரம்ப கல்வி தொடக்கம் உயர்தரம் வரை மடவளை மதீனா தேசிய பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர் ஆவார். இவர் தற்போது உக்குவலை குரிவலை ஹமீதியா கல்லூரியின் ஆசிரியராகவும் ,இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (SLIATE) பகுதி நேர விரிவுரையாளராகவும் சேவையாற்றுகின்றார் .
இவரின் கல்வி மற்றும் தொழிற் தகைமைகளாவன;
MBA (WUSL),MPA& Mgt (UOC), M.Ed (OUSL),LLB,PGDE(OUSL),PGDin Acc & Fina(UOP), B.Sc(Bus.Admin) (USJ) HNDA (SLIATE) , CMA (CMA.SL)
தகவல் — F.M.Farsan



