அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் (கடன் அடிப்படையில்) 20 கிலோ அரிசி வழங்கும் வேலைத்திட்டமொன்றை செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, 10 கிலோ எடையுள்ள இரண்டு அரிசிப் பொதிகளை (பச்சை அரிசி மற்றும் நாடு அரிசி) தவணை முறையில் வழங்குவதற்குக் விவசாய அமைச்சினால் முன்மொழிவொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக வவுச்சர் (Voucher) ஒன்றை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவிக்கையில்;
“இதோ நாம் அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசியை வழங்கத் தயாராகி வருகிறோம். விவசாய அமைச்சிடமிருந்து ஒரு முன்மொழிவு கிடைத்துள்ளது. அரச ஊழியர்களுக்கு சற்றே சலுகை விலையில் 20 கிலோ அரிசி வழங்கப்படும்.
10 கிலோ வீதம் இரண்டு பொதிகள் – பச்சை அரிசி மற்றும் நாடு அரிசி. தவணை முறையில் இது வழங்கப்படும்.
இதற்காக ஒரு வவுச்சர் வழங்கப்படும். அதனை சதோச (Sathosa) அல்லது கூட்டுறவு விற்பனை நிலையங்களில் (Cooperative) கொடுத்து அரிசியைப் பெற்றுக் கொள்ள முடியும். அனைவரும் விவசாயிகளின் அரிசியை உண்ண வேண்டும் தானே.”



