News

உலக நம்பர் 1 இந்திய அணிக்கு என்ன ஆச்சு? அயர்லாந்து அணியுடன் இரு T20 போட்டியிலும் தொடர் தோல்வி – தொடரை வென்று அயர்லாந்து வரலாற்று வெற்றி

இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை அயர்லாந்து அணி முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

இன்று (28) இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் 155 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 1 ஓட்டத்தால் தோல்வியடைந்தது.

இதற்கமைய 2 போட்டிகளைக் கொண்ட இந்த இருபதுக்கு 20 தொடரை அயர்லாந்து அணி 2 -0 என்ற அடிப்படையில் முழுமையாக கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

அத்துடன் டி20 சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து 16 தொடர்களை வென்று சாதனை படைத்திருந்த இந்தியாவின் வெற்றிப் பயணத்திற்கும் அயர்லாந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button