News

“ஈரான் தரப்பில் ஒரு சந்திப்பைக் கோரியுள்ளனர்… இந்த சந்திப்பு கட்டாரில் உள்ள தோஹாவில் நாளை நடைபெறும்” என்று
ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டு 110 நாட்களுக்கு மேலாக நீடித்தது. தற்போது தற்காலிக அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 60 நாட்களுக்குள் நிரந்தரமான அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள இருதரப்பும் தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில் கடந்த 25-ந்திகதி ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற சிங்கப்பூர் நாட்டுச் சரக்குக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. தங்களின் கடல் எல்லையை மீறியதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியது. இதற்கு பதிலடியாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவின் பேரில், அமெரிக்க இராணுவம் ஈரான் மீது அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதனால் இருதரப்புக்கும் இடையே பதற்றம் நிலவியது.









இதற்கு பதிலடியாக பஹ்ரைனில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. மேலும் ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற எண்ணெய் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் சார்பில் அறிவிக் கப்பட்டது.இந்தநிலையில் ஈரான் மீது அமெரிக்கா 2ஆவது நாளாக தாக்குதல் மேற்கொண்டது. இதில் ஈரானின் 10 இடங்களில் இராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஈரானின் குவாசம் தீவில் உள்ள சிரிக் நகர், ஹர்முஸ்கன் மாகாணத்தில் உள்ள பண்டர் இ லெங்கா ஆகிய நகரங் களில் உள்ள ராணுவ தளங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடர்பாக அமெரிக்க இராணுவம் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது.



இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியதற்காக ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான கிடங்குகள் மற்றும் ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா போர்வி மானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. அவர்கள் ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது மிகவும் சாத்தியமாக உள்ளது. நாம் இனிமேலும் நியாயமாக இருக்க முடி யாத ஒருநிலை வரலாம். அமெரிக்கா தொடங்கிய இராணுவ நட வடிக்கையை முழுமையாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற் பட்டால், ஈரான் என்ற நாடே இல்லாமல் போய்விடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்காவின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்தால், அமைதி பேச்சுவார்த்தையை முழுமையாக நிறுத்திவிடுவோம் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்தன.



இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், “ஈரான் தரப்பில் ஒரு சந்திப்பைக் கோரியுள்ளனர். இந்த சந்திப்பானது கட்டாரில் உள்ள தோஹாவில் நாளை நடைபெறும்” என்று பதிவிட்டுள்ளார். ட்ரம்ப் இவ்வாறு கூறினாலும் ஈரான் தரப்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button