பொதுமக்களின் தவறினாலேயே டெங்கு பரவுகிறது..

டெங்கு நோய் வேகமாக பரவுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, பொதுமக்கள் தத்தமது பொறுப்புகளை சரியாக நிறைவேற்றாததே என்று ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
“இலங்கையில் பெருமளவிலான டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதற்கு ஒரு முக்கிய காரணம் பொதுமக்கள் தத்தமது பொறுப்புகளை சரியாக நிறைவேற்றாததே என்று நாங்கள் கருதுகிறோம்.
ஏனெனில் ஒரு அரசாங்கத்திற்கு, குறிப்பாக மாநகரசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொது இடங்களைச் சுத்தம் செய்யும் பொறுப்பு இருப்பதைத் தவிர, உங்களது வீடுகள் மற்றும் உங்களது வீட்டுத் தோட்டங்களைச் சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு உங்களிடமே காணப்படுகிறது.
எனவே, இதனை ஒரு தேசியப் பணியாகக் கருதி, உங்கள் கைகளில் உள்ள பாரிய பொறுப்பை தேசத்திற்காக நிறைவேற்றுங்கள். உங்களது வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் மிகவும் அவதானமாக இருங்கள்.”

