ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைதாகியுள்ள சுரேஷ் சாலேதனது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டார்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் இருந்தபோது, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லே ஆரம்பித்திருந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அவரது சட்டத்தரணிகளின் அறிவுரைகள் மற்றும் சமர்ப்பிப்புகளையடுத்தே சல்லே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்ட சல்லே, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், அங்கு அவர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் புலனாய்வுப் பிரதானி தொடர்ந்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.



