News

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இரு கைதிகள் உயிரிழந்து, 23 பேர் படுகாயமடைந்தனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் இன்று (05) ஏற்பட்ட மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 23 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஆரம்பத்தில் 25 பேர் காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.



அவர்களில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இரு கைதிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறைச்சாலையில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளும் பாதுகாப்புப் பிரிவினரும் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button