News

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) காத்தான்குடி நகர சபை தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டில் நேற்று கைது

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஒருவர், பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டில் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள, தமக்குச் சொந்தமான சுற்றுலாப் பயணிகள் விடுதியில்  பணியாற்றி வந்த 21 வயதுடைய பெண் ஒருவரை, இவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.



இதனையடுத்து, விசாரணைக்காக அழைக்கப்பட்ட குறித்த நகர சபை உறுப்பினரை, ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.



இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button