News

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 253 பயணிகளுடன் துருக்கி நோக்கி சென்ற விமானம் மீது பறவை மோதியதால் மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்டது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கி 253 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் புறப்பட்ட துருக்கி எயார்லைன்ஸ் விமானம், பறவை மோதியதால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.



விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களால் விமானத்தை மீண்டும் தரையிறக்க விமானி தீர்மானித்தார்.



இதையடுத்து, எரிபொருளின் அளவைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், விமானம் பாதுகாப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button