News

இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 258 ரன் இலக்கை நோக்கி இந்திய அணி பேட் செய்து படு தோல்வியை சந்தித்துள்ளது.




இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சவுதாம்டனில் இன்று நடந்தது .

இதில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்துக்கு சால்ட் ஏமாற்றம் அளித்தாலும், கேப்டன் ப்ரூக், பட்லர் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால், இங்கிலாந்து அணி பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன் குவித்தது.






தொடர்ந்து, ப்ரூக் மற்றும் பட்லர் இந்திய பவுலிங்கை விளாசி தள்ளினர். இதனால், இங்கிலாந்தின் ரன் வேகமாக உயர்ந்தது. இருவரும் அரைசதம் அடித்தனர். சிறப்பாக விளையாடி பட்லர் 51 பந்தில் சதம் விளாசினார். இறுதியில் பட்லர் 131 ரன் குவித்து அவுட்டாக, இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 257 ரன் எடுத்தது.கேப்டன் ப்ரூக் 95 ரன் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.


இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் நிறைய கேட்ச் வாய்ப்புகளை கொடுத்தும், அதனை இந்திய வீரர்கள் பிடிக்கத் தவறினர். இதுவே ரன் அதிகரிக்கக் காரணமாக அமைந்தது.


258 ரன் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா 3 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 14 பந்துகளில் 27 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பிறகு வந்த கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயரும் 28 ரன்னில் பெவிலியன் திரும்பினர். விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷான், 35 பந்தில் 56 ரன் அடித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button