News

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தன : சிறையில் நெரிசலை குறைக்க, புதிய சிறைச்சாலைகளை அமைக்காமல் , கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்  சட்டங்களையும், வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த கோரிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதன்படி, நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பதவியிலிருந்து நீக்கப்படாமல் இந்தச் சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணையொன்றை முன்னெடுக்க முடியாது என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வர தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்காக புதிய சிறைச்சாலைகளை அமைப்பதை விடுத்து, கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் மாற்றுச் சட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன், வரலாற்றுச் சிறப்புமிக்க போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை மீண்டும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார விமர்சித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button