News
எதிரணியில் உள்ள ஆறு தமிழ் பேசும் கட்சிகள் திங்கள்கிழமை கூட்டு ஒப்பந்த உடன்படிக்கையை அறிவிக்க போவதாக தெரிவிப்பு

நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில், பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்களில் இணைந்து பணியாற்றுவதற்கான உடன்படிக்கையை ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் அறிவிக்கவுள்ளன.
தற்போதைய சூழ்நிலையில் பொதுவான நலன்சார்ந்த பிரச்சினைகளில் இணைந்து செயல்படுவதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ள இக்கட்சிகள், இது தொடர்பான மேலதிக விபரங்களை இந்நிகழ்வின் போது வெளியிடவுள்ளன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இதில் ஈடுபட்டுள்ளன.



