News

நாடு முழுவதும் (அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட) 500க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்கள் தொடர்பில் ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு விரிவான விசாரணைகள்

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக, இலஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த 500க்கும் மேற்பட்ட நபர்களில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 60 அரசியல்வாதிகளும், கிட்டத்தட்ட 100 உயர் அரச அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.



ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாகவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நபர்களுக்கு எதிராக ஒரே நேரத்தில் சொத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர்களால் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களின் உண்மைத்தன்மை குறித்து இந்த விசாரணையின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.


சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய உத்தியோகத்தர் பிரிவில் அண்மையில் ஊடகவியலாளர்களும் கப்பல்துறை ஆவணப் பணியாளர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்த போதிலும், இணையத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அது ஜூலை 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) பிரிவின்படி, சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு அபராதம் விதிக்க அல்லது ஓராண்டிற்கு மேற்படாத சிறைத்தண்டனை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button