அனுரவுக்கு கொடுத்தால் திருப்பி எடுக்க கஷ்டம்
அனுரவுக்கு கொடுத்தால் திருப்பி எடுக்க கஷ்டம் என மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியார் குறிப்பிட்டார்.
கண்டி மஹிய்யாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர்,
இன்று அனுரவுக்கு கொடுத்துப் பார்போம் என சிலர் கிளப்பி இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஜே வி பி வரலாறு பற்றி தெரியாத இளைஞர்கள்.
கோத்தாபய ராஜபக்ஷ தன்னால் நாட்டை கொண்டு செல்ல இயலாது என்று தெரிந்துகொண்ட பின்னர் செய்யக்கூடிய ஒருவரிடம் கொடுத்து விட்டு ஒதுங்கி சென்றுவிட்டார் ஆனால் ஜே வி பி செய்ய முடியாவிட்டால் விட்டு செல்லமாட்டார்கள். வட கொரியாவை போல ஜனநாயகத்தை இல்லாமல் செய்து விடுவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று அனுரவின் பேச்சில் மக்கள் மயங்கி உள்ளார்கள். ஷெய்தானும் நல்லா பேசுவான் அதற்காக மக்கள் ஷெய்தானின் பின்னல் செல்லக்கூட்டது என குறிப்பிட்டார்.