News

 ஹரக் கட்டாவிடம் 1,200 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் முற்பகல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ரக்கித ராஜபக்ஷ மற்றும் SJB முன்னாள் அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் பிற்பகல் மீண்டும் விளக்கமறியலில் வைக்க அழைத்து செல்லப்பட்டனர்

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரக்கித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகிய மூவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (17) முற்பகல் குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவின் மனைவியிடமிருந்து குறித்த சந்தேகநபர்கள் 1,200 இலட்சம் ரூபாவை இலஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக வௌியான குரல் பதிவுகள் கசிந்தமையை அடுத்து சந்தேகநபர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அண்மையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

‘ஹரக் கட்டா’ தடுப்புக் காவலில் இருந்தபோது அவருக்குச் சலுகைகளை வழங்குவதற்காக இந்த இலஞ்சப் பணம் பெறப்பட்டதாக சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக சந்தேகநபர்கள் முன்னதாக விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button