News
நிதி ஆணையகத்தின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் திருமதி என். ஆர். அனீஸ் அவர்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நியமித்தார்

நிதி ஆணையகத்தின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் திருமதி என். ஆர். அனீஸ் அவர்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
ஜே. எம். சி. ஜே. விஜேதுங்க மற்றும் கே. கருணாகரன் ஆகியோர் ஆணையத்தின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமனக் கடிதங்கள் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவினால் நியமிக்கப்பட்டவர்களிடம் கையளிக்கப்பட்டன.
நிதி ஆணையத்தின் முந்தைய உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்காகவே இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.



