News

கோழி தகராறு விவகாரத்தில் மகன் தா**க்கியதில் தந்தை இன்று காலை உயிரிழப்பு #இலங்கை

கோழி தகராறு விவகாரத்தில் மகனால் தாக்கப்பட்ட தந்தை, நுவரெலியா பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (22) அன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், லிந்துலை மாவுசலை மேல் பிரிவைச் சேர்ந்த அந்தோணி ராஜா (வயது 65) ஆவார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையைத் தாக்கிவிட்டுத் தலைமறைவாக இருந்த மகன், கடந்த 19 ஆம் திகதி லிந்துலை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

பொலிஸ் விசாரணைகளின் பின்னர், கடந்த 20 ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button