News

லங்கா சத்தோச 11 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது.. சின்ன வெங்காயம் ரூ. 71, மா ரூ. 1, சீனி ரூ. 3 வினாலும் குறைக்கப்பட்டது..

நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில், ஜூலை 24 முதல் அமலுக்கு வரும் வகையில் 11 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க லங்கா சத்தோச (Lanka Sathosa) நிறுவனம் தீர்மானித்துள்ளது.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இந்த விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சும் லங்கா சத்தோச நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

இந்த விலை குறைப்பில் அதிகபட்ச நிவாரணமாக சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோகிராமுக்கு 71 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர பருப்பு, அரிசி, சீனி மற்றும் டின் மீன் உள்ளிட்ட அன்றாட தேவைக்கான பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

Recent Articles

Back to top button