நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மாலிமாவுடன்… தோட்டப்புறங்களில் 95% மக்கள் மாலிமாவுடன்… – பிரதி அமைச்சர்

எதிர்க்கட்சியினர் என்னதான் கூறினாலும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்துடனேயே இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் நகரில் (26 ஆம் திகதி) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு பிரத்தியேகக் கருத்தொன்றை வெளியிடுகையிலேயே சுந்தரலிங்கம் பிரதீப் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
அண்மையில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து எதிர்க்கட்சி திவாலாகியிருப்பது தெளிவாக புலனாகிறது. எதிர்க்கட்சித் தலைவர் செய்ய வேண்டியது அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்வதை விடுத்து, ஒரு பலமான எதிர்க்கட்சியை நிறுவுவதே ஆகும்.
இன்று எதிர்க்கட்சியைச் சுற்றி இருப்பவர்கள் சிறைச்செல்ல வேண்டியவர்கள், பிணையில் இருப்பவர்கள் மற்றும் பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களாவர்.
நாட்டின் மக்கள் ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் இருக்கிறார்கள்; அவர்களுள் தோட்டப்புற மக்களில் 95% மக்கள் அரசாங்கத்துடனேயே இருக்கிறார்கள் என சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.



