சம்மாந்துறையில் இன்று முதல் நேர்மை வாரம்
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய நேர்மை வார விழிப்புணர்வு நிகழ்வு ஆரம்பம்! (சர்ஜுன் லாபீர்)இலங்கையில் நேர்மையான அரச சேவையொன்றை ஊக்கப்படுத்தி, பிரஜைகளின் நெறிமுறை ரீதியான நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) எனும் தேசியப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சமூகம் முழுவதும் நேர்மை மற்றும் நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்ட தூய்மையான இலங்கையைக் கட்டியெழுப்பும் வகையிலான இத்தேசிய நேர்மை வாரம், 2026 ஜூலை …
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய நேர்மை வார விழிப்புணர்வு நிகழ்வு ஆரம்பம்!
(சர்ஜுன் லாபீர்)
இலங்கையில் நேர்மையான அரச சேவையொன்றை ஊக்கப்படுத்தி, பிரஜைகளின் நெறிமுறை ரீதியான நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) எனும் தேசியப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சமூகம் முழுவதும் நேர்மை மற்றும் நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்ட தூய்மையான இலங்கையைக் கட்டியெழுப்பும் வகையிலான இத்தேசிய நேர்மை வாரம், 2026 ஜூலை 27 ஆம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதன் ஒரு அங்கமாக, சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (27 ஆம் திகதி திங்கட்கிழமை) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனிபா அவர்களின் தலைமையில் பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, அரச சேவையில் வெளிப்படைத்தன்மை, லஞ்ச ஊழலற்ற நேர்மையான சேவை வழங்கல் மற்றும் பொதுமக்கள் நலனை முதன்மைப்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தும் “நேர்மைச் சத்தியப்பிரமாண உறுதியுரை” உதவிப் பிரதேச செயலாளர் வி. வாசீத் அஹமட் அவர்களால் சத்தியப்பிரமாண உறுதியுரை வாசிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் நேர்மையாகப் பணியாற்றுவதாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இச்சிறப்பு நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் வி. வாசீத் அஹமட், கணக்காளர் எஸ்.எல். சர்த்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமில், மேலதிக மாவட்டப் பதிவாளர் ஏ.கே. ரினோஸா உட்பட பிரதேச செயலகத்தின் திணைக்களத் தலைவர்கள், பிரிவுச் செயலாளர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



