News
ஹரக்கட்டாவிடம் இலஞ்சம் பெற்ற குற்றத்தில் கைதான ரக்கித ராஜபக்ச, சரித் அபேசிங்க ஆகியோர் பிணையில் விடுதலை

இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் சட்டத்தரணி ரகித ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண முன்னாள் அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது



