News
புலமைப்பரீட்சை வினாத்தாள் வெளியாகிதால் 3 கேள்விகளை நீக்கிய பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் ஆர்ப்பாட்டம்.
புலமைப்பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்கு பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (18) பெற்றோர் பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழங்கப்பட்ட மதிப்பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் சிலர், பரீட்சை திணைக்களத்திற்குள் சென்று கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருவதாகவும், பொலிஸாரும் கலகம் அடக்கும் பிரிவினரும் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது