அன்புப் பரிசு ❤️ 🎁

அன்புப் பரிசு ❤️ 🎁
தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட உலோகக் கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.6 கிலோகிராமிற்கும் அதிகமான ஹாஷிஷ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை இலங்கை சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தச் சரக்கு ஜூலை 24, 2026 அன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL405 விமானம் மூலம் இலங்கைக்கு வந்தடைந்ததுடன், அது ஒரு அன்புப் பரிசு (gift shipment) என பிரகடனப் படுத்தப்பட்டிருந்தது.
ஜூலை 31 அன்று TRICO UPB களஞ்சியசாலையில், அனுமதிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரின் முன்னிலையில் சுங்க அதிகாரிகளால் இந்தச் சரக்கு பரிசோதிக்கப்பட்டது.
அந்த ஆய்வின் போது, உலோகக் கொள்கலன்களுக்குள் போதைப்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் பொலித்தீன் பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இறுதிப் பட்டியலிடலின் போது, கஞ்சா, ஹாஷிஷ் மற்றும் ஹாஷிஷ் எண்ணெய் உள்ளிட்ட கஞ்சா தொடர்பான போதைப்பொருட்கள் பேக்கேஜிங் உட்பட 10.608 கிலோகிராம் எடையில் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பிடப்பட்ட சந்தைப் பெறுமதி ரூ. 106.08 மில்லியனாகும்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



