மஹர சிறை மோதலில் ஒருவர் உயிரிழப்பு – கைதிகள் அறுவர் படுகாயம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 6 கைதிகள் படுகாயமடைந்துள்ளனர்.
மஹர சிறைச்சாலை வளாகத்தினுள் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக பல விசேட பொலிஸ் குழுக்கள் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதற்றத்திற்கான காரணம் குறித்தோ அல்லது ஏதேனும் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தோ மேலதிக விபரங்கள் உடனடியாகப் பெறப்படவில்லை.
மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கைதிகளை பார்வையிட சென்ற உறவினர்கள், சிறைச்சாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த கைதிகளை ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணிகள் இடம்பெறுகின்றன.
விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.அதேசமயம் சிறைச்சாலைக்குள் இருந்து புகை வெளியேறுவதால் உள்ளே தீப்பரவல் ஏதேனும் இடம்பெற்றிருக்கலாமென அஞ்சப்படுகிறது.துப்பாக்கிச் சூட்டு சத்தங்களும் கேட்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலைமையை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்



