8 முக்கிய குற்றச்சாட்டுக்கள் – முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் யோஷித ராஜபக்ஷ மீது பாய்ந்தது வழக்கு

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தொடர்வதாக அறிவித்துள்ளது.
போதிய கல்வித் தகைமை இல்லாத நிலையில், யோஷித ராஜபக்ஷவை கடற்படையில் இணைத்து, அவருக்கு பிரித்தானிய அரச கடற்படைப் பயிற்சியைப் பெற்றுக்கொடுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, யோஷித ராஜபக்ஷவிற்கு பயனளித்தமை தொடர்பில் 8 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதலாவது பிரதிவாதியாக வசந்த குமார ஜயதேவ கரன்னாகொடவும், இரண்டாவது பிரதிவாதியாக யோஷித கனிஷ்க ராஜபக்ஷவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக 25 சாட்சிகளின் பெயர்கள் மற்றும் 47 சாட்சிய ஆவணங்கள் அடங்கிய பட்டியலை ஆணைக்குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது



