News

எரிபொருள் நிறுவனங்களின் இலாபம் இரட்டிப்பாக அதிகரிப்பு !

போரினால் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வரும் நிலையில், உலகின் முன்னனி எரிபொருள் நிறுவனங்களின் இலாபம் இரட்டிப்பாகியுள்ளது.

ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் (crude oil) விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, ‘ஷெல்’ (Shell) நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு இலாபம் இரட்டிப்புக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

ஷெல் மற்றும் BP நிறுவனங்கள் மட்டுமன்றி, நோர்வே நாட்டின் ‘எக்வினோர்’ (Equinor) போன்ற ஏனைய பெரு நிறுவனங்களும் இந்த ஆண்டில் சாதனை அளவிலான உயர் இலாபத்தைப் பதிவு செய்துள்ளன.

எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஏற்ற இறக்கங்களைச் சாதகமாகப் பயன்படுத்தி மேற்கண்ட வர்த்தக நடவடிக்கைகளே இதற்குப் பகுதியளவு காரணமாகும்.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் ஷெல் நிறுவனம் 9.84 பில்லியன் அமெரிக்க டொலர்களை (7.37 பில்லியன் பவுண்டுகள்) இலாபமாகப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் இது 4.26 பில்லியன் டொலர்களாக மட்டுமே பதிவாகியிருந்தது.

Recent Articles

Back to top button