News
ஹட்டன் பகுதியில் மண் மேடொன்று வீடொன்றின் மீது சரிந்து விழுந்ததில் சிலர் சிக்கி காணாமல் போயுள்ள சம்பவம் பதிவு

ஹட்டன், பொல்பிட்டிய பகுதியில் இன்று (03) இடம்பெற்ற நிலச்சரிவைத் தொடர்ந்து சிலர் காணாமல் போயுள்ளதாகப் பதிவாகியுள்ளது.
மண் மேடொன்று வீடொன்றின் மீது சரிந்து விழுந்ததில் சிலர் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் தகவல்படி, தற்போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


