சமூக வலைதளங்களில் வைரலான வெள்ளவத்தை வீடொன்றிற்குள் பெண் ஒருவர், சி*றுமி ஒருவரைத் தாக்குவது போன்ற வீடியோ … தாக்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடம் வேண்டுகோள்

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றிற்குள் பெண் ஒருவர் சிறுமி ஒருவரைத் தாக்குவது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருவது தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள், பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது குடும்பத்தினரும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனத் தீர்மானித்ததை அடுத்து நிறைவு செய்யப்பட்டுள்ளன.
பொலிஸாரின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டு முதல் அந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த அச்சிறுமி, வீட்டின் பெண் உரிமையாளரால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு மாறாகச் செயல்பட்டதை ஒப்புக்கொண்டார்.
வீட்டின் உரிமையாளர் எச்சரிக்கும் வகையில் தன்னை சில முறை அடித்ததாக பொலிஸாரிடம் கூறிய அச்சிறுமி, ஆனால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தான் விரும்பவில்லை என வலியுறுத்தினார்.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டின் உரிமையாளரின் கணவர் என அடையாளம் காணப்பட்ட நபரால் இக்காணொளி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது தெரியவந்தது. இரு தரப்பினரிடமிருந்தும் பெறப்பட்ட வாக்குமூலங்கள், சித்தரிக்கப்பட்ட சம்பவத்தின் துல்லியத்தை உறுதிப்படுத்தின.
வீட்டின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எதையும் தொடங்க விரும்பவில்லை என சிறுமியின் பெற்றோரும் பொலிஸாரிடம் தெரிவித்தனர். அதற்கமைய, விசாரணை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது.



