News

இன்பாக்ஸ் மெசேஜில் Hi என ஆரம்பித்து பழகி, வீடியோ call இல் ஆடைகளை களைய வைத்து screen record செய்து பறிக்கும் கொடூரமான ‘செக்ஸ்டார்ஷன்’ (Sextortion) பிளாக்மெயில் மோசடி இலங்கையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது – கவனமாக இருங்கள்

By : Ziyad Aia

Instagram, Facebook Messenger, WhatsApp பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியென்றால் கொஞ்சம் உஷாராக இருங்கள்! உங்கள் ஆசையையே தூண்டிலாகப் போட்டு, குடும்பத்தின் முன் அசிங்கப்படுத்தி, லட்சக்கணக்கில் பணத்தைப் பறிக்கும் கொடூரமான ‘செக்ஸ்டார்ஷன்’ (Sextortion) பிளாக்மெயில் மோசடி இலங்கையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதாக கணினி அவசர கால பதிலளிப்பு குழு (SLCERT) எச்சரித்துள்ளது.

அண்மைக்காலமாகப் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு புகார் அளித்து வரும் நிலையில், இந்த மோசடி வலை எப்படி விரிக்கப்படுகிறது தெரியுமா?

ஆரம்பம் ஒரு சாதாரண “Hi” தான்!
அழகான ஒரு பெண்ணின் இன்ஸ்டாகிராம் கணக்கில் / Facebook Messengerஇல் இருந்து வரும் ஒரு சாதாரண “Hi” மெசேஜில்தான் இந்த வலை விரிக்கப்படுகிறது.

சில நாட்கள் சாதாரணமாகப் பேசி, நம்பிக்கை வளர்த்துக் கொள்ளும் மோசடிக்காரர்கள், மெல்ல மெல்ல கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பத் தொடங்குவார்கள். பிறகு, உரையாடலை What’s வீடியோ Callற்கு மாற்றுவார்கள்.

வீடியோ Callல் பேசும்போது, எதிர்முனையில் இருக்கும் நபரை ஆடைகளைக் களையச் சொல்லித் தூண்டுவார்கள். அவர்கள் சொல்வதை நம்பி ஆடைகளைக் களையும் கணமே, அத்தனையும் ‘ஸ்கிரீன்ஷாட்’ மற்றும் ‘ஸ்கிரீன் ரெக்கார்ட்’ செய்யப்பட்டுவிடும். ஆபத்து இங்கேதான் தொடங்குகிறது.

நீங்கள் வலையில் விழுவதற்கு முன்பாகவே, உங்கள் சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் சோஷியல் மீடியா கணக்குகளைக் கண்டறிந்து, அவர்களைத் தங்கள் பிரண்ட் லிஸ்ட்டில் சேர்த்து வைத்திருப்பார்கள்! “கேட்கும் பணத்தைத் தராவிட்டால் இந்த வீடியோவை உன் குடும்பத்திற்கு அனுப்பிவிடுவோம்” என்று மிரட்டும்போதே, பாதிக்கப்பட்ட நபர் மனரீதியாக நிலைகுலைந்து போகிறார்.

ஆரம்பத்தில் வெறும் 5,000 அல்லது 10,000 ரூபாய் கேட்டவுடன் தப்பித்துவிடலாம் என நினைத்துப்பணத்தை அனுப்புவார்கள். ஆனால், அது பல லட்சங்களை அடையும் வரை மிரட்டல் நிற்காது.

கடந்த ஏப்ரல் மாத புகார்களின்படி, இந்தியாவைச் சேர்ந்த மோசடிக் கும்பலே இதன் பின்னணியில் இருப்பதாகக் கூறப்பட்டது. அப்போதெல்லாம் இந்திய வங்கி கணக்குகளுக்கே பணம் அனுப்பப்பட்டது.

ஆனால், அண்மைக்காலமாக இலங்கையிலுள்ள உள்ளூர் தனிநபர் வங்கி கணக்குகளுக்குப் பணத்தை மாற்றச் சொல்கிறார்கள். இதனால், இந்தச் சதியில் உள்ளூர் நபர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

SLCERT தரும் அவசியமான எச்சரிக்கை:

🛑 முன்பின் தெரியாத நபர்களின் (குறிப்பாக கவர்ச்சிகரமான ப்ரொஃபைல்களின்) பிரண்ட் ரெக்வெஸ்ட் அல்லது மெசேஜ்களை நம்பி பேசாதீர்கள்.

🛑 சமூக வலைத்தளங்களில் யாருடனும் அந்தரங்கமான புகைப்படங்களையோ அல்லது ஆபாசமான வீடியோ உரையாடல்களையோ ஒருபோதும் மேற்கொள்ளாதீர்கள்.

🛑 ஒருவேளை நீங்கள் இப்படிப்பட்ட மிரட்டலுக்கு ஆளானால், பயந்துபோய் தொடர்ந்து பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டு, உடனடியாக Sri Lanka CERT அமைப்பையோ அல்லது Policeயையோ தொடர்பு கொண்டு உதவி பெறுங்கள்.

ஆசைகாட்டி மோசடி செய்யும் கும்பலிடம் உங்களை இழந்துவிடாதீர்கள்… விழிப்புடன் இருங்கள்!
#ziyadaia
நன்றி: Newswire

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button