News

மேகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ள அகில விராஜ் காரியவசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கடிதம்

அகில விராஜ் காரியவசத்தின் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கை:
ஐக்கிய தேசியக் கட்சி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கடிதம்


மேகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) சிரேஷ்ட துணைத் தலைவர் அகில விராஜ் காரியவசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி, அக்கட்சி சிறைச்சாலை அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளது.


சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரின் பாதுகாப்புக்கு, அண்மையில் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.


காரியவாசம் காவலில் இருக்கும் காலத்தில் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பாகும் என அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.


மேலும், இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தனவுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


வியாழக்கிழமை இரவு மேகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சரான காரியவாசம், சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகராகப் பணியாற்றிய காலத்தில் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button