News

பொலிஸார் எச்சரிக்கை ⚠️



கொஹுவலை பாலத்திற்கு அடியில் மோட்டார் சைக்கிளில் சடலம் ஒன்று காணப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் புகைப்படத்தைத் தொடர்ந்து, பொய்யான அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய் தகவல்கள், புனையப்பட்ட உள்ளடக்கங்கள் அல்லது வன்முறை மற்றும் பொது அமைதியின்மையை தூண்டக்கூடிய செய்திகளைப் பரப்புவது இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர், அதன் மூலத்தைச் சரிபார்த்து, நம்பகமான அதிகாரப்பூர்வ மூலங்கள் மூலம் தகவல்களை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பொது அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பொய் தகவல்களைப் பரப்பும் நபர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டம் மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் பொருத்தமான விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

“உண்மையை உறுதிப்படுத்தாமல் எதையும் பகிர வேண்டாம்” என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button