News

பெண் ஒருவரின் தகாத புகைப்படைங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ்அப்பில் பரப்பிய நபர் பொலிஸாரால் கைது

மாம்புரிய பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவர், பெண் ஒருவரின் அரைகுறை ஆடை மற்றும் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வாட்ஸ்அப் (WhatsApp) தளத்தில் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ், வாரியப்பொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


பாதிக்கப்பட்ட பெண் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (13) ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்குள் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.


அப்பிரிவைச் சேர்ந்த விசேட பொலிஸ் குழுவொன்றினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வாரியப்பொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button