News

பொருளாதாரத்தின் எதிர்கால தொலைநோக்கு நிச்சயமற்றது – மத்திய வங்கி

நடுத்தர காலத்தில் பொருளாதாரத்தின் எதிர்கால தொலைநோக்கு குறித்து அதிகளவில் நிச்சயமற்ற நிலைமை நிலவுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

புவிசார் அரசியல் போக்குகள், மாறிவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சூழ்நிலைகள், அத்துடன் காலநிலை அபாயங்களால் ஏற்படக்கூடிய தாக்கங்களே இந்த உயர் நிச்சயமற்ற நிலைமைக்குக் காரணம் என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (13) இரவு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அதிநவீன பணவியல் கொள்கை அறிக்கையில் (2026 ஆகஸ்ட்) இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் தீவிரமடைந்துள்ள புவிசார் அரசியல் நெருக்கடிகள், உலகளாவிய சக்திச் சந்தை, வர்த்தகப் போக்குவரத்து, விநியோகச் சங்கிலி மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆகியவற்றில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், அதன் மறைமுகத் தாக்கம் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளிலும் பாதகமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷியாம் நுவன் கணேவத்த

Recent Articles

Back to top button