News
ஊடகவியலாளர் சலீம் றமீஸ். ஜே பி அவர்களின் புதல்வர் றமீஸ் றிஹாம் அஹமத் அல்-ஹாபிழ் பட்டம் பெற்றார்

பாலமுனை மஹாஸினும் உலூம் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஏ .ஆர். எம்.மன்சூர் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் இன்று ( 15) இடம் பெற்ற போது, தென் கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப உத்தியோகத்தரும் சிரஷ்ட ஊடகவியலாளருமான சலீம் றமீஸ். ஜே பி அவர்களின் புதல்வரான றமீஸ் றிஹாம் அஹமத் அவர்கள் அல்-ஹாபிழ் பட்டத்தை பெற்றார்.
அல்ஹம்துலில்லாஹ்.
இதில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ எம் எஸ் உதுமாலெப்பை அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.






