News

கொழும்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மீலாது நபி போட்டி!

மேயர் வ்ராய் கெல்லி பால்தசார் உள்ளிட்ட மீலாத் குழுவினரால், இம்முறை கொழும்பு மாநகர சபையின் கீழ் உள்ள கொழும்பு நகரப் பிரதேச பாடசாலை மாணவர்களுக்காக போட்டியொன்றை நடத்துமாறு மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் முன்மொழிந்திருந்தார். அதற்கான குழு அனுமதியும் கிடைத்தது.

இந்தப் போட்டி கொழும்பு மாநகர சபை இஸ்லாமிய சங்கத்தின் ஏற்பாட்டில், புதிய நகர மண்டபத்தில் 2026/08/15 அன்று ஆரம்பமானது.

ஆரம்ப நிகழ்வில் இஸ்லாமிய மதகுருமார்கள், எதிர்க்கட்சித் தலைவர் ரீசா சாருக், மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான், மாநகர ஆணையாளர் ரோஹண, மாநகர செயலாளர் நதீகா, கால்நடை வைத்தியர் இஜாஸ், திடக்கழிவு முகாமைத்துவ பணிப்பாளர் ஷஹீனா, மாநகர செயலாளர் அலுவலகத்தைச் சேர்ந்த அசீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

2020ஆம் ஆண்டு மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் முன்வைத்த மீலாதுன் நபி தொடர்பான சபைத் தீர்மானம், முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க அவர்களால் சபையில் நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானத்தில் இடம்பெற்ற மாநகர சபை வளாகத்தை ஒளியூட்டுதல் மற்றும் அலங்கரித்தல், சமய, கலை, கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளில் பயனுள்ள சிறுவர் நிகழ்ச்சிகளை நடத்தும் முன்மொழிவு, சபைத் தீர்மானத்திற்கு அமைய நடைமுறைப்படுத்தப்படுவதற்கு தற்போதைய மேயர் வ்ராய் கெல்லி பால்தசார் அவர்கள் முன்முயற்சி எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Recent Articles

Back to top button