News

ChatGPT மூலம் கொ**டூரத் திட்டம்  தீ*ட்டி, தாயையும் தம்பியையும் கொ**ன்ற 17 வயது சி*றுவன் அர்ஜுன் அரவிந்த் அமெரிக்காவில் கைது

அமெரிக்காவில் தாயையும் தம்பியையும் கொன்ற 17 வயது சிறுவன்: ChatGPT-இல் கொடூரத் திட்டம் குறித்துத் தேடியது அம்பலமானது


அமெரிக்காவில் தனது தாயையும் 14 வயது தம்பியையும் படுகொலை செய்ததாக 17 வயது சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் இக்கொடூரச் செயலைச் செய்வதற்கு முன்பு, தனது குடும்பத்தைக் கொல்வது தொடர்பான “கற்பனைக் கதைகள் மற்றும் கோட்பாட்டு யோசனைகளை” உருவாக்க ChatGPT தளத்தைப் பயன்படுத்தியதாக அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.


மாசசூசெட்ஸ் மாகாணத்தின் ஆக்டன் (Acton) பகுதியில் உள்ள வீட்டில் சுதா வெங்கடேசன் (45) மற்றும் அவரது இளைய மகன் சித்தார்த் அரவிந்த் (14) ஆகிய இருவரும் உயிரிழந்து கிடந்தனர்.

இக்கொலைகள் தொடர்பாக சுதாவின் மூத்த மகனான அர்ஜுன் அரவிந்த் (17) மீது இரண்டு கொலைக் வழக்குகள் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிக்கிள்செக்ஸ் கவுண்டி மாவட்ட அரசு வழக்கறிஞர் மரியான் ரையன் (Marian Ryan) இதுகுறித்துக் கூறுகையில், “அர்ஜுன் சமீபகாலமாக கவலைக்கிடமான முறையில் நடந்துகொண்டுள்ளார்.

இணையம் மற்றும் ChatGPT தளத்தின் மூலம் தனது குடும்பத்தைக் கொல்வது போன்ற கற்பனைக் கதைகள் மற்றும் ஆபத்தான திட்டங்கள் குறித்து அவர் தேடியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.
மேலும், தனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்கள் மற்றும் சூழல்களைக் கொண்ட ‘கோதிக்’ (Gothic) பாணியிலான கற்பனைக் கதைகளை உருவாக்க அர்ஜுன் ChatGPT-ஐப் பயன்படுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.


சம்பவத்தன்று அர்ஜுனின் தந்தை தனது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல் போனதாலும், வீட்டிற்கு வந்த தனிப்பயிற்சியாளரால் (tutor) உள்ளே செல்ல முடியாததாலும், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே விரைந்து வந்த காவல்துறையினர் சோதனையிட்டதில், வீட்டின் முதல் தளத்தில் சித்தார்த்தும், அடித்தளத்தில் (basement) தாய் சுதாவும் சடலமாகக் கிடப்பதைக் கண்டறிந்தனர். இருவரின் உடல்களிலும் பலத்த காயங்கள் காணப்பட்ட நிலையில், அவர்களின் மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் குறித்து மருத்துவக் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொலைகளைச் செய்த பிறகு, அர்ஜுன் தனது தாயின் 2014-ஆம் ஆண்டு ‘ஹோண்டா அக்கார்ட்’ (Honda Accord) காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். மறுநாள் காலை அருகில் உள்ள வேலேண்ட் (Wayland) பகுதியில் காரில் இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.


நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அர்ஜுன் அரவிந்த் சார்பில் ‘குற்றமற்றவர்’ (Not guilty) என வாதாடப்பட்ட நிலையில், அவரை பிணையில் வெளிவர முடியாதவாறு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இக்கொலை சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button