பதுளை போதனா வைத்தியசாலையில் கடமை புரிந்த நிலையில் காணாமல் போயிருந்த மயக்க மருந்து நிபுணத்துவ மருத்துவரின் சடலம் வனப்பகுதியில் இருந்து மீட்பு

பதுளை போதனா வைத்தியசாலையில் கடமை புரிந்த நிலையில் காணாமல் போயிருந்த மயக்க மருந்து நிபுணத்துவ மருத்துவரின் சடலம், இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மாபகடை 17 ஆம் கட்டை பகுதியில் வியான கால்வாய்க்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கார் ஒன்று இருப்பதாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் தொடங்கப்பட்டன.
நேற்று (23) இரவு முதல் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த குறித்த வாகனம், காணாமல்போன மருத்துவருக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டது.
இதையடுத்து, பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது, அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து மருத்துவரின் சடலம் மீட்கப்பட்டது.
சடலத்திற்கு அருகில் மருந்துப் பொதி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



