News
கொத்தமல்லி விலை அதிகரிப்பு ! 100 கிராம் 125 ரூபா
இரண்டு வருடங்களுக்கு முன்னர் 70 முதல் 80 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்பட்ட 100 கிராம் கொத்தமல்லியின் தற்போதைய சில்லறை விலை 125 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில்லறை சந்தையில் 100 கிராம் கொத்தமல்லி 125 ரூபாவாக காணப்படுகின்ற போதிலும், அதன் மொத்த விலை ஒரு கிலோகிராம் 450 ரூபா அல்லது அதற்கு அண்மித்த விலையாகக் காணப்படுவதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்யா, உக்ரைன், மொராக்கோ போன்ற நாடுகளில் இருந்து நாட்டிற்கு கொத்தமல்லி இறக்குமதி செய்யப்படுவதோடு, போர் நிலைமை மற்றும் இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பு காரணமாக கொத்தமல்லியின் விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் சங்கமும் தெரிவித்துள்ளது.

