News

மாநகர சபையில் நிதி மோசடி மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தமை… பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க கைது

பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.



மாநகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.



இது தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாநகரசபையின் இரண்டு வருமான பரிசோதகர்கள் உள்ளிட்ட சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் மேயர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



கைது செய்யப்பட்ட முன்னாள் மேயரிடம் பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button