News

சிறைச்சாலைகளைக் காட்டி எங்களை உங்களால் பயமுறுத்த முடியாது – எமது பிரச்சார இயக்கத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது; நாமல்

செப்டம்பர் 12ஆம் திகதி முதல் அரசாங்கத்திற்கு எதிராகத் தொடங்கப்படவுள்ள எமது பிரச்சார இயக்கத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

“எங்கள் பேரணிக்கு அனுராதபுரத்தில் ஒரு குறிப்பிட்ட விளையாட்டு மைதானத்தைக் கேட்டோம், ஆனால் அது எங்களுக்கு மறுக்கப்பட்டது. இந்த அடக்குமுறை எமது முயற்சிகளைத் தடுத்துவிட முடியாது” என்றார்.

மேலும், “சிறைச்சாலைகளைக் காட்டி எங்களை உங்களால் பயமுறுத்த முடியாது” என்றும் அவர் எச்சரித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button