News

சவூதியில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் அவசர அறிவித்தல்

சவூதி அரேபியாவின் மேல் மாகாணத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அங்கு வாழும் அனைத்து இலங்கைப் பிரஜைகளும் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு ஜெத்தாவிலுள்ள இலங்கை துணைத் தூதரக அலுவலகம் அறிவித்தல் விடுத்துள்ளது.

அதற்கமைய, கைப்பேசிகளுக்கு அவசர எச்சரிக்கை சமிக்ஞைகள் (National Warning Alerts) கிடைக்கப்பெறும் சந்தர்ப்பங்களில், உடனடியாகச் செயல்பட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு துணைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

• பாதுகாப்பான இடங்களைத் தேர்ந்தெடுத்தல்: பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லும்போது, கட்டிடங்களுக்குள் தங்கியிருந்து ஜன்னல்கள், கண்ணாடிகள், பால்கனிகள் மற்றும் கூரைகளிலிருந்து விலகி பாதுகாப்பான இடங்களைத் தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

• வெளியில் இருக்கும்போது: வெளியில் இருந்தால், உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்திற்குள் செல்லவும் அல்லது பலமான சுவரின் பின்னால் ஒதுங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

• பொது இடங்களைத் தவிர்த்தல்: மக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

• வாகனம் ஓட்டும்போது: வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தால், வீதியின் ஒருபுறமாக வாகனத்தை நிறுத்தி, பாலங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களிலிருந்து விலகி இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவங்களைப் புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவது அல்லது கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்க்குமாறும், சவூதி அரேபியாவின் சட்ட திட்டங்களைச் சரியாகப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பாமல், அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசரத் தொடர்பு எண்கள்:

• மக்கா மற்றும் மதினா மண்டலங்களுக்கு: 911

• சவூதி அரேபியாவின் ஏனைய பகுதிகளுக்கு: 998

• இலங்கை துணைத் தூதரகத்தின் அவசரத் தொடர்பு எண்: 056 098 6671 (இந்த எண்ணை அவசரத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்).

Recent Articles

Back to top button