News

பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டுதல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு


✍🏻 நூருல் ஹுதா உமர்

கல்முனை ஷைனிங் ஸ்டார் நிறுவன அலுவலகத்தில் பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டுதல் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

ஷைனிங் ஸ்டார் நிறுவனத்தின் ஏற்பாட்டில், மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீலங்காவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் 55 பேர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் வளவாளராகக் கலந்துகொண்ட மௌலவி அஷ்ரஃப், மரணமடைந்தவரை இஸ்லாமிய மார்க்க முறைப்படி குளிப்பாட்டும் விதிமுறைகள், அதன்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள், ஜனாஸா பணிகளில் சமூக உறுப்பினர்களின் பொறுப்புகள் மற்றும் அவசரமான சந்தர்ப்பங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக விரிவான விளக்கங்களை வழங்கினார்.

ஜனாஸா குளிப்பாட்டுதல் தொடர்பான சரியான மார்க்க அறிவையும் நடைமுறைத் திறனையும் பெண்களிடையே ஏற்படுத்துவதே இக்கருத்தரங்கின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. மரண நிகழ்வுகளின்போது உரிய மார்க்க வழிகாட்டல்களைப் பின்பற்றி பொறுப்புடன் செயற்படுவதற்கான விழிப்புணர்வையும் இந்நிகழ்வு ஏற்படுத்தியது.

இந்நிகழ்வில் ஷைனிங் ஸ்டார் நிறுவனத்தின் இணை நிறுவுநர்களான பஸீரா ரியாஸ், தஸ்னீம் காரியப்பர், செயலாளர் ஆயிஷா சித்தீக்கா மற்றும் உறுப்பினர்களான திருமதி சபீனா, ஃபிரோஸா காரியப்பர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சமூகத்தின் அன்றாட வாழ்விற்கு அவசியமான மார்க்க அறிவு மற்றும் நடைமுறைத் திறன்களை வழங்கும் வகையில் இவ்வாறான பயனுள்ள நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பது சமூகத்தின் அறிவையும் பொறுப்புணர்வையும் மேம்படுத்துவதற்கு உதவும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



UMAR LEBBE NOORUL HUTHA UMAR
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button